×

ஜல்சக்தி அபியான் திட்ட விவசாயிகள் மேளா

கரூர், பிப்.12: கரூரில் ஜல்சக்தி அபியான் திட்டத்தின் விவசாயிகள் மேளா நடைபெற்றது. இந்திய வேளாண் ஆராய்ச்சி கழக வேளாண் அறிவியல் மையத்தின் மூலம் நடைபெற்ற இந்த விழாவில் விவசாயிகளுக்கு தேவையான உபகரணங்கள், விதைகள், வேளாண் கருவிகள் போன்றவை அடங்கிய கருத்துக் காட்சி அமைக்கப்பட்டிருந்தது. நிகழ்ச்சியில் கரூர் மாவட்ட வருவாய் அலுவலர் ராஜேந்திரன் தலைமை வைத்து பேசினார். வேளாண் இணை இயக்குனர் வளர்மதி, தோட்டக்கலை துறை துணை இயக்குனர் மோகன்ராம், வேளாண் அறிவியல் மையத் தலைவர் முதுநிலை விஞ்ஞானி முனைவர் திரவியம், கால்நடை பல்கலைக் கழக ஆராய்ச்சி மைய தலைவர் முனைவர் ராணி, வேளாண் செயற்பொறியாளர் ராஜ்குமார், வேளாண் அலுவலர் ஜெயந்தி, ஆகியோர் நீர் மேலாண்மை குறித்து பேசினர்.

வேளாண் பொறியாளர் ஜான்பிரிட்டோ ராஜ், மழைநீர் சேகரிப்பு, தூர்ந்துபோன கிணறு மற்றும் ஆழ்குழாய்களில் மழைநீரை எவ்வாறு சேகரிப்பது, நீர் மேலாண்மைக்கான நவீன தொழில் நுட்பங்கள், குறித்து விவசாயிகளுக்கு எடுத்துரைத்தார். முனைவர் முருகன், வறட்சிக்காலத்தில் ஆடுகளை வளர்க்கும் தொழில்நுட்பம் குறித்து பேசினார். இந்த மேளாவில் வேளாண்மை, தோட்டக்கலை, வேளாண்மை பொறியியல், கால்நடை பராமரிப்பு, மற்றும் வேளாண் வணிகம் மற்றும் துறை சார்ந்த அதிகாரிகள் கலந்து கொண்டனர். ஒவ்வொரு துறை வாரியாக நீர் மேலாண்மைக்கு வழங்கப்படும் மானிய திட்டங்கள் குறித்து விளக்கம் அளித்தனர். வேளாண் அறிவியல் மைய தொழில்நுட்ப வல்லுனர்கள் மூலம் விவசாயிகளுக்கு வறட்சியைத் தாங்கும் ரகங்கள், நீர் மேலாண்மை குறித்த நவீன தொழில்நுட்பங்கள் எடுத்துரைக்கப்பட்டன.

வேளாண் அறிவியல் மையம் சார்பில் விவசாயிகளுக்கு நீர்மேலாண்மைக்கான நவீன தொழில் நுட்பங்கள் குறித்த கருத்துக்காட்சி ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. கரூர் மாவட்டத்தை சேர்ந்த விவசாயிகள், பண்ணை மகளிர், கிராமப்புற இளைஞர்கள், மாணவர்கள் கலந்து கொண்டனர்.

Tags : Jalsakti Abhiyan Project Farmers Mela ,
× RELATED மாவட்டம் முழுவதும் 173.1 மிமீ பதிவு கரூரை குளிர்வித்த 2 மணி நேர மழை